“எந்த வெற்றியும் சாதாரணமானது அல்ல” - துரைமுருகன் பேட்டி

“எந்த வெற்றியும் சாதாரணமானது அல்ல” - துரைமுருகன் பேட்டி
“எந்த வெற்றியும் சாதாரணமானது அல்ல” - துரைமுருகன் பேட்டி

எந்த வெற்றியையும் சாதாரணமாக நினைக்க முடியாது என வேலூர் வெற்றி தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியது. காலை முதலே திமுக மற்றும் அதிமுக கட்சிகள் இடையெ இழுபறி நிலை இருந்தது. ஒருகட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்தார். பின்னர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலைக்கு வந்தார். நீண்ட நேரமாக இழுபறியில் சென்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், 8000க்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய துரை முருகன், “37 தொகுதிகளில் திமுகவிற்கு மக்கள் எப்படி வாக்களித்தார்களோ, அதேபோன்று இந்த முறையும் வாக்களித்துள்ளனர். வெற்றி உறுதியாக்கப்பட்டிருக்கிறது. வாணியம்பாடியில் திமுகவிற்கு அதிகம் வாக்களித்துள்ளார்கள். இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் ஆதரவு எங்களுக்கு எப்போதுமே இருக்கிறடு. எந்த வெற்றியையுமே சாதாரணமாக நினைக்க முடியாது. இருப்பினும் இந்த வெற்றியை மக்கள் திமுகவிற்கும், ஸ்டாலினுக்கும் கொடுத்த வெற்றியாக நினைக்கிறோம்” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com