திடீரென மயங்கி விழுந்த துரை தயாநிதி... தனியார் மருத்துவமனையில் அனுமதி

மு.க.அழகிரியின் மகனான துரை தயாநிதி, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துரை தயாநிதி
துரை தயாநிதிபுதிய தலைமுறை

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பேரனும் மு.க. அழகிரியின் மகனுமான துரை தயாநிதி, உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும் மு.க. அழகிரியின் மகனுமான துரை தயாநிதிக்கு வயது 36. இவர் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

நேற்று சென்னை வீட்டிலிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார் துரை தயாநிதி . இதனைத்தொடர்ந்து குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மருத்துவர்கள் இவரை சோதித்து பார்த்ததில் துரை தயாநிதிக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

துரை தயாநிதி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகையை நிராகரித்த நீதிமன்றம் - காரணம் என்ன?

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த இவரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்த்து அவர் உடல்நலம் குறித்து தனது சகோதரர் குடும்பத்தாரிடம் விசாரித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com