” சரியான நேரத்தில் நடவடிக்கைகள் எடுத்ததாலேயே பெரும் சேதம் தவிர்ப்பு” - முதல்வர்

"சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததாலேயே பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் பாதிப்பு மிக மோசமாக இருந்திருக்கும்" - மு.க.ஸ்டாலின்
மிக்ஜாம் புயல்
மிக்ஜாம் புயல்புதிய தலைமுறை

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பு என்பது பல இடங்களில் தவிர்க்க முடியாத அளவிற்கு சேதத்தினை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக மத்திய குழு தமிழ்நாட்டுக்கு வருகை தந்து, ஆய்வு மேற்கொண்டது.

இது குறித்து முதல்வர் பேசும்போது “ புயலால் ஏற்பட்ட சேதத்தைப் பார்வையிட வந்த மத்திய நிபுணர்கள், தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகத்தான் பெரும் இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

'சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததாலேயே பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் பாதிப்பு மிக மோசமாக இருந்திருக்கும்' என்றும், 'உரிய நேரத்தில் நீர் திறந்து விடப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது' என்றும், 'அதற்காக இந்த அரசை நாங்கள் பாராட்டுகிறோம்' என்றும் ஒன்றியக் குழு பாராட்டி இருக்கிறது.

ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கும், எங்களுக்குமான கொள்கை முரண்பாடுகள் அனைவரும் அறிந்ததே. அதனையும் தாண்டி இந்தளவுக்குப் பாராட்டுகிறார்கள் என்றால், தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாடுகள்தான் இதற்குக் காரணம்.

2015-ல் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கதில் இருந்து நீர் திறந்து விடுவதில் ஏற்பட்ட குளறுபடியே பெரும் பிரச்னையை உருவாக்கியது. ஆனால் ஆட்சியில் அமர்ந்த நாளில் இருந்தே கட்டமைப்புகளை வலுப்படுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உங்கள் அரசு எடுத்துள்ளது?” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com