சத்தமின்றி உயரும் சின்ன வெங்காயம் விலை.. கிலோ ரூ.150க்கு விற்பனை

சத்தமின்றி உயரும் சின்ன வெங்காயம் விலை.. கிலோ ரூ.150க்கு விற்பனை
சத்தமின்றி உயரும் சின்ன வெங்காயம் விலை.. கிலோ ரூ.150க்கு விற்பனை

வெங்காயம் வரத்து குறைவால் மதுரையில் சின்ன வெங்காயத்தின் விலை 130 முதல் 150 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

தமிழகத்தில் பெய்த பருவம் தவறிய மழையினால் பல்வேறு இடங்களில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த சின்ன வெங்காய சாகுபடி அழுகல் நோயால் பாதிக்கப்பட்டது. இதனால் சந்தைகளுக்கு வழக்கமான வரும் அளவை விட சின்ன வெங்காயம் வரத்து தற்போது குறைவாக உள்ளது. கடந்த மாதம் சரிவாக காணப்பட்ட வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

மதுரை மாட்டுத்தாவனி காய்கறி சந்தைக்கு தேனி, திண்டுக்கல், தர்மபுரி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து வெங்காயம் வரும் நிலையில் கடந்த 2 வாரங்களாக வரத்து குறைந்துள்ளதால் மொத்த விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய் முதல் 130 ரூபாய்க்கும் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ 130 முதல் 150 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

இதனிடையே பெரிய வெங்காயத்தின் வரத்து வழக்கமான அளவில் இருந்து வருவதால் பெரிய வெங்காயத்தின் விலை மொத்த விற்பனையில் 40 முதல் 45 ரூபாய்க்கும் சில்லறை விற்பனையில் 60 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்து வருவதால் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் உள்ள வாரச்சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது சந்தையாக விளங்கும் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் சின்ன வெங்காயம் மற்றும் விதை வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த நிலையில் இன்று புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தைக்கு 600க்கும் மேற்பட்ட விதை வெங்காயம் மூட்டைகளை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். கடந்த வாரம் கிலோ 60 ரூபாய்க்கு விற்ற விதை வெங்காயம் இன்று கிலோ 170 ரூபாய்க்கு விற்பனையானது. எதிர்பார்த்த வரத்து இல்லாததால் விதை வெங்காயம் விலை தினமும் அதிகரித்து வருகிறது.

கடந்த வாரம் சந்தைக்கு 1200 மூட்டை விதை வெங்காயம் விற்பனைக்கு வந்தது. விலை கிலோ 60 ரூபாய்க்கு விற்றது. இந்தவாரம் வரத்து 600 மூட்டையாக குறைந்துவிட்டது. இதனால் விலையும் ரூ.110 அதிகரித்து ரூ.170 க்கு விற்றது. விதை வெங்காயத்தை விட சின்ன வெங்காயம் குறைவான விலைக்கே விற்கிறது. வெங்காயம் விலை என்பதால் விவசாயிகளி விதை வெங்காயம் வாங்க ஆர்வம் காட்டியதால் விதை வெங்கயாம் விலையேற்றுத்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

<iframe width="699" height="393" src="https://www.youtube.com/embed/dY8dBb6zIq0" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com