தமிழ்நாடு
தொடர் மழை: மேட்டூர் அணை நீர்வரத்து 21,000 கன அடியாக உயர்வு
தொடர் மழை: மேட்டூர் அணை நீர்வரத்து 21,000 கன அடியாக உயர்வு
தமிழ்நாட்டில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
தொடர் மழையால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில், தமிழ்நாட்டிலும் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிளில் பரவலாக மழை பொழிந்து வருவதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனிடையே, அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
அதேவேளையில், தொடர் மழை காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் பெருமளவில் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், அருவிகளின் அழகை பொதுமக்கள் தூரத்தில் நின்றபடி பார்த்துச் செல்கின்றனர்.
இதையும் படியுங்கள்: ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் காவிரி

