தமிழ்நாடு
ஊரடங்கால் தீவனம் வரத்து இல்லை: பண்ணைகளில் உயிரிழக்கும் கோழிகள்
ஊரடங்கால் தீவனம் வரத்து இல்லை: பண்ணைகளில் உயிரிழக்கும் கோழிகள்
உசிலம்பட்டியில் தீவனம் இல்லாததால் கோழிப் பண்ணைகளில் உள்ள கோழிகள் உயிரிழந்து வருகின்றன.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஆயிரக்கணக்கான கோழி பண்ணைகள் இயங்கி வருகின்றன. ஊரடங்கு உத்தரவால் வாகன போக்குவரத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால், கோழிகளுக்கான தீவனங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களாக தீவனங்கள் வராமல் கோழிகளுக்கு தண்ணீர் மட்டுமே வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான கோழிகள் உயிரிழப்பதாக பண்ணை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தீவனங்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.