தமிழ்நாடு
கனமழை எதிரொலி: பயணிகளின் நலன் கருதி மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு
கனமழை எதிரொலி: பயணிகளின் நலன் கருதி மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு
தலைநகர் சென்னையில் கனமழை காரணமாக பயணிகளின் நலன் கருதி தனது சேவையை 1 மணி நேரம் நீட்டித்துள்ளதாக தெரிவித்துள்ளது சென்னை மெட்ரோ. அதன்படி கடைசி ரயில் பயண நேரம் 11 மணி என்றிருந்த நிலையில் இருந்து 12 மணி வரை (30/12/21) நீட்டிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ரயில் முனையத்தில் இருந்தும் கடைசி மெட்ரோ ரயில் 12 மணிக்கு விட்டுச்செல்லும் என அறிவித்துள்ளது சென்னை மெட்ரோ.
அதற்கு தகுந்த வகையில் பயணிகள் தங்களது பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ தெரிவித்துள்ளது. பயணிகள் மாஸ்க் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது சென்னை மெட்ரோ.
மழை காரணமாக சென்னையின் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.