செம மழை இருக்கு! தென்காசி, தேனி, திண்டுக்கல்-க்கு ஆரஞ்சு அலர்ட்.. விரைந்தது பேரிடர் மீட்புக்குழு!

தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இன்று கன முதல் மிக கனமழைக்கான 'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாநில பேரிடர் மீட்புக்குழு
மாநில பேரிடர் மீட்புக்குழுபுதிய தலைமுறை

தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இன்று கன முதல் மிக கனமழைக்கான 'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, வரும் 21ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், கனமழை எச்சரிக்கை எதிரொலியாக நெல்லைக்கு மாநில பேரிடர் மீட்பு குழுவினர் வருகை தந்துள்ளனர்.

தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை குழுவின் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் 90 பேர் அடங்கிய மீட்பு குழுவினர் சென்னையில் இருந்து நெல்லை வந்துள்ளனர்.

மாநில பேரிடர் மீட்புக்குழு
கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக வந்த காட்டாற்று வெள்ளம்.. துடிதுடித்து உயிர் போகும் அந்தக் காட்சி!

அதேபோல், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான மாநில அளவிலான தேர்வுகள், வரும் 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில், அந்த தேர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com