கள்ளச்சாராயம் குடித்த 2 தொழிலாளிகள் உயிரிழப்பு

கள்ளச்சாராயம் குடித்த 2 தொழிலாளிகள் உயிரிழப்பு
கள்ளச்சாராயம் குடித்த 2 தொழிலாளிகள் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கள்ளச்சாராயம் குடித்த இரண்டு கூலித் தொழிலாளிகள் உயிரிழந்தது தொடர்பான சம்பவ இடத்தில் தென் மண்டல ஐஜி ஆய்வு செய்தார். சம்பவம் தொடர்பாக 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பள்ளப்பட்டியில் இன்று அதிகாலை கள்ளச்சாரயம் குடித்த கவுண்டம்பட்டியைச் சேர்ந்த முருகன் மற்றும் சாய்ராம் ஆகிய இருவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் மரணமடைந்தனர். அதேபோல், தங்கபாண்டியன் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தினார். 

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், இப்பகுதியில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்கள் விற்கப்படுவதாக காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com