\
சசிகலாவை சந்திக்க டிடிவி-க்கு அனுமதி மறுப்பு

சசிகலாவை சந்திக்க டிடிவி-க்கு அனுமதி மறுப்பு

சசிகலாவை சந்திக்க டிடிவி-க்கு அனுமதி மறுப்பு
Published on

சிறையில் சசிகலாவை சந்திக்க தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவைச் சந்திக்கச் சென்ற அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறையில் அதிகாரிகள் தன்னைக் காக்க வைத்து பின்னர் சசிகலாவை சந்திக்க அனுமதி மறுத்து விட்டதாக தெரிவித்தார்.

முன்னதாக, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சகல வசதி கொண்ட அறைகளுடன் சசிகலா வண்ண உடைகளில் வலம் வருவது போன்ற வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சசிகலாவை டிடிவி தினகரன் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com