அடக்கம் செய்ய பணம் இல்லை - பர்சில் இருந்த பணத்தை தந்த டி.எஸ்.பி

அடக்கம் செய்ய பணம் இல்லை - பர்சில் இருந்த பணத்தை தந்த டி.எஸ்.பி

அடக்கம் செய்ய பணம் இல்லை - பர்சில் இருந்த பணத்தை தந்த டி.எஸ்.பி
Published on

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கொலை செய்யப்பட்டவரை அடக்கம் செய்வதற்காக, மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் பணம் கொடுத்து உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகஸ்தியம்பள்ளியைச் சேர்ந்த செந்தில் என்பவர் நேற்று முன்தினம் குடும்பத்தகராறு காரணமாக தனது அண்ணன் முறை உள்ள ரவி என்பவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது சகோதரர் ரவி கைது செய்யப்பட்டார். ரவியின் மனைவி, மகன் மற்றும் செந்திலின் தாய் செல்வி உள்ளிட்ட உறவினர்கள் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட செந்தில், உப்பளத்தில் கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார். பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் செந்திலின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல், அவரது குடும்பத்தினர் தவித்துள்ளனர். இந்தச்சூழலில் வழக்கை விசாரிக்க வந்த வேதாரண்யம் டி.எஸ்.பி சபியுல்லா, தனது பர்சில் வைத்திருந்த பணத்தை கொடுத்து சடலத்தை அடக்கம் செய்ய உதவிசெய்தார். இதற்கான ஒரு வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com