\
தமிழ்நாடு, புதுச்சேரியில் 26 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் - வானிலை மையம்

தமிழ்நாடு, புதுச்சேரியில் 26 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் - வானிலை மையம்

தமிழ்நாடு, புதுச்சேரியில் 26 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் - வானிலை மையம்
Published on: 

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 26ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

24ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்புநிலையை ஒட்டியே காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாகக் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச வெப்பநிலையான 21 டிகிரி செல்சியஸ் இரவில் பதிவாகும் என்பதால் மாலை தொடங்கி காலை வரை பனி இருக்கும் எனப் புரிந்து கொள்ளலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com