\
குடிபோதையில் காவலரை தாக்கிய மாணவர் : கைது செய்து விசாரணை

குடிபோதையில் காவலரை தாக்கிய மாணவர் : கைது செய்து விசாரணை

குடிபோதையில் காவலரை தாக்கிய மாணவர் : கைது செய்து விசாரணை
Published on

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மதுபோதையில் காவலரை தாக்கிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானாத்தூர் அடுத்த முட்டுக்காடு மாதா கோயில் தெருவை சேர்ந்த இளைஞர் ரிச்சர்ட் (20). இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் மது குடித்துவிட்டு சாலையில் ரிச்சர்ட் தகராறு செய்துள்ளார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் ரோந்து வாகன போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கே குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்த ரிச்சர்ட்டை போலீசார் வாகனத்தில் ஏற்ற முற்பட்டனர். அப்போது தலைமை காவலர் கணேசன் என்பவரை மாணவர் ரிச்சர்ட் முகத்தில் குத்தியுள்ளார். இதனால் காவலருக்கு முகத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து குடிபோதையில் இருந்த ரிச்சர்ட்டை கானகத்தூர் போலீசார் காவல்நிலையம் அழைத்துச்சென்றனர். அவரிடம் தற்போது உரிய விசாரணை நடைபெற்று வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com