அடையாறு ஆறு, சைதாப்பேட்டை
அடையாறு ஆறு, சைதாப்பேட்டைPT

தலைக்கேறிய போதை.. அடையாறு ஆற்றில் இடறி விழுந்தவர் சடலமாக மீட்பு.. சைதை அருகே சோகம்!

சைதாப்பேட்டை மேம்பாலத்தில் இருந்து அடையாறு ஆற்றில், மதுபோதையில் தவறி விழுந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Published on

சென்னை சைதாப்பேட்டை மேம்பாலத்தில் இருந்து நேற்றிரவு அடையாறு ஆற்றில் ஒருவர் குதித்துவிட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் பேரில் கிண்டி தீயணைப்புத் துறை படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, அடையாறு ஆற்றில் விழுந்தவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

அடையாறு ஆறு, சைதாப்பேட்டை
அடையாறு ஆறு, சைதாப்பேட்டைPT

இரவு முழுவதும் தேடி வந்த நிலையில், இன்று காலை அடையாறு ஆற்றில் விழுந்த நபரின் உடலை கிண்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை வீரர்கள் மீட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சைதாப்பேட்டை காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், தவறி விழுந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணையில் அந்த நபர், சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த எடிசன் என்பது தெரியவந்தது. மேலும் காவல்துறை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், எடிசன் நேற்று அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு மேம்பாலத்திலிருந்து தவறி சைதாப்பேட்டை ஆற்றில் விழுந்துள்ளதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

எடிசன்,
எடிசன்,PT

பின்னர், கைப்பற்றப்பட்ட எடிசனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சைதாப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com