\
குடிபோதையில் கலாட்டா செய்த காவலர்

குடிபோதையில் கலாட்டா செய்த காவலர்

குடிபோதையில் கலாட்டா செய்த காவலர்
Published on: 

கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடி அருகே மதுப்போதையில் ரகளையில் ஈடுபட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

காவலர் விஜியவர்மன் மது அருந்திவிட்டு அப்பகுதியில் சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவரை பிடித்து சோதனை சாவடி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆல்பேட்டை சோதனை சாவடியை முற்றுகையிட்டு சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர் அங்குவந்த காவல்துறை அதிகாரிகள் காவலரை விசாரனைக்காக அழைத்துச் சென்றதையடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com