\
அரசு பஸ்சை போதையில் தாறுமாறுமாக ஓட்டிய டிரைவர் கைது

அரசு பஸ்சை போதையில் தாறுமாறுமாக ஓட்டிய டிரைவர் கைது

அரசு பஸ்சை போதையில் தாறுமாறுமாக ஓட்டிய டிரைவர் கைது
Published on

சென்னை அருகே மது போதையில் அரசு விரைவு பஸ்சை தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநரும் நடத்துநரும் கைது செய்யப்பட்டனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் அரசு விரைவு பேரூந்து ஒன்று சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. அந்த பேருந்து தாறுமாறாக வந்ததை அடுத்து சாலையில் சென்றுகொண்டிருந்த மக்கள் பீதியடைந்தனர். அந்தப் பேருந்து பல வாகனங்கள் மீது மோதிவிட்டு வேகமாகச் சென்றது. இதையடுத்து பொதுமக்கள் அந்தப் பேருந்தைத் தடுத்து நிறுத்தினர். பிறகுதான் அதன் ஓட்டுநர் மது போதையில் இருந்தது தெரிய வந்தது. அவரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர். பேருந்தின் நடத்துநரும் போதையில் இருந்ததை அடுத்து அவருக்கும் அடி உதை விழுந்தது. பின்னர் அவர்களை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஓட்டுநரையும் நடத்துநரையும் போலீசார் கைது செய்தன‌ர். அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும், மாற்று பேருந்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com