மதுபோதையில் வாகனம் ஓட்டினால் கைது  - உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுபோதையில் வாகனம் ஓட்டினால் கைது - உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுபோதையில் வாகனம் ஓட்டினால் கைது - உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

குடித்துவிட்டு மதுபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களை கைது செய்யுங்கள் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விபத்தில் காயம் ஏற்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் நபர்களை கைது செய்ய வேண்டும் எனவும், குற்றத்திற்கு உரிய நபர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், குடித்துவிட்டு மதுபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களை கண்காணிக்க காவல்துறை தனிப்படை ஒன்றை அமைக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com