குடித்துவிட்டு கலாட்டா செய்தவர்களை விரட்டி விரட்டி கைது செய்த காவல்துறை

குடித்துவிட்டு கலாட்டா செய்தவர்களை விரட்டி விரட்டி கைது செய்த காவல்துறை
குடித்துவிட்டு கலாட்டா செய்தவர்களை விரட்டி விரட்டி கைது செய்த காவல்துறை

திருவள்ளூரில் குடியிருப்பு பகுதிகளில் குடித்துவிட்டு கலாட்டா செய்தவர்களைக் காவல் துறையினர் விரட்டி விரட்டி கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஜனப்பன் சத்திரம் கூட்டுச் சாலையில் நேற்று முதல் அரசு மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் அங்கு மது வாங்க வருபவர்கள் தங்களது வாகனங்களைச் சாலை ஓரங்களிலும், அங்குள்ள சாய் கிருபா நகர் குடியிருப்பு பகுதியிலும் நிறுத்தியுள்ளனர். இது மட்டுமன்றி அந்தக் குடியிருப்பு பகுதிகளிலேயே அமர்ந்து மதுபானத்தையும் அருந்தியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

தகவல் அறிந்து நிகழ்வு இடத்திற்கு வந்த பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் ஆய்வு செய்தார். அதன் பின்னர் அங்கு வந்த மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் கல்பனா தத் தலைமையாலான காவல் துறையினர், சாய் கிருபா நகர் குடியிருப்பில் அமர்ந்து மது அருந்தியவர்களை விரட்டி விரட்டி கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து சம்பவ இடத்தை காஞ்சிபுர சரக டிஐஜி தேன்மொழி ஆய்வு செய்தார். அப்போது, குடியிருப்பு பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com