\
போதையில் கார் ஓட்டி இரண்டு பெண்களை கொன்ற ஐ.டி. ஊழியர்.. ஓ.எம்.ஆர் அருகே நடந்த பகீர்!

போதையில் கார் ஓட்டி இரண்டு பெண்களை கொன்ற ஐ.டி. ஊழியர்.. ஓ.எம்.ஆர் அருகே நடந்த பகீர்!

போதையில் கார் ஓட்டி இரண்டு பெண்களை கொன்ற ஐ.டி. ஊழியர்.. ஓ.எம்.ஆர் அருகே நடந்த பகீர்!
Published on

சாலையை கடக்க முயன்ற இரு பெண்கள் மீது கார் மோதிய விபத்தில் இருவரும் பலியாகினர். குடிபோதையில் கார் ஒட்டிய நபர் கைது.

செங்கல்பட்டு மாவட்டம், பழைய மாமல்லபுர சாலை, நாவலூர் அருகே நேற்றிரவு 11 மணியளவில் சாலையை கடக்க முயன்ற பெண்கள் இருவர் மீது ஐ.டி. ஊழியர் ஒருவர் அதிவேகமாக குடிபோதையில் காரை ஓட்டி வந்து மோதிய விபத்தில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பணி முடித்து வீடு திரும்பிய போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களை பரிசோதித்ததில் கேரளாவை சேர்ந்த ஸ்ரீலட்சுமி(23), எனபவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் சிகிச்சையில் இருந்த திருப்பதியை சேர்ந்த லாவண்யா என்பவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குடிபோதையில் அதிவேகமாக காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மோதிஷ் குமார்(20), கைது செய்யப்பட்டிருக்கிறார். சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com