போதையில் ஆசிரியர்: கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்

போதையில் ஆசிரியர்: கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்
போதையில் ஆசிரியர்: கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா தெய்வேந்திரபுரம் கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் அடிக்கடி மது அருந்திவிட்டு வகுப்புக்கு வருவதாக புகார் எழுந்துள்ளது.

தேனி மாவட்டம் தெய்வேந்திரபுரம் கிராமத்தில் உள்ள தொடக்க பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் புகழேந்தி. 35 மாணவர்கள் படிக்கும் அந்தப் பள்ளியில் புகழேந்தி என்ற ஒரு ஆசிரியர் மட்டுமே பணிபுரிகிறார். இந்நிலையில், அந்த ஆசிரியரும் அடிக்கடி வகுப்பிற்கு மது அருந்தி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.முறையாக பாடம் நடத்தாததால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாவதாக பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர். 

ஆசிரியா் புகழேந்தி தினந்தோறும் பள்ளியிலேயே மது குடித்து விட்டு வகுப்பறையிலேயே வாந்தி எடுத்து அதிலேயே படுத்துவிடுவதாகவும் குடி போதையில் மாணவா்களை தொடா்ந்து அடித்து துன்புறுத்துவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். மாணவா்களை கழிவறையை தூய்மைப்படுத்த கட்டாயப்படுத்துவதாகவும், தினந்தோறும் வகுப்பறையிலேயே குடித்துவிட்டு தன்னிலை  மறந்து கிடப்பதால் மாணவா்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. போதையின் உச்சத்தில் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்க வாய்ப்பு உள்ளதால் தலைமை ஆசிரியா் புகழேந்தியை அங்கிருந்து அகற்றிவிட்டு வேறு ஆசிரியரை நியமிக்கவேன்டும் என கிராமப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெற்றோர்களின் புகார் குறித்து ஆசிரியர் புகழேந்தியை தொடர்பு கொள்ள முயற்சித்த போது இதுகுறித்து பேச மறுத்து விட்டார். இதுகுறித்து  கல்வி அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டபோது இவ்விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com