ஜாபர் சாதிக்முகநூல்
தமிழ்நாடு
போதைப்பொருள் கடத்தல் வழக்கு| ஜாஃபர் சாதிக் கூட்டாளிகளின் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாஃபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகளுக்குச் சொந்தமான 55 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
ஹோட்டல், சொகுசு பங்களா உள்ளிட்ட 14 அசையா சொத்துகள், 7 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இவற்றின் மதிப்பு 55 கோடியே 30 லட்சம் ரூபாய் என்றும் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.
EDFile image
இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை கடத்திய வழக்கில் சினிமா தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.