கிருஷ்ணா
கிருஷ்ணாமுகநூல்

விடிய விடிய விசாரணை... 16 மணி நேரமாக விசாரணை வளையத்தில் நடிகர் கிருஷ்ணா!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Published on

நடிகர் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக அதிமுக முன்னாள் பிரமுகர் பிரசாத், தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்தை அழைத்து சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அவரிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. அதன் முடிவில், ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு, அவரிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இதுதொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் தங்களுடைய விசாரணையை விரிவுப்படுத்தி உள்ளனர்.

நடிகர் ஸ்ரீகாந்த் அளித்த தகவலின் அடிப்படையில், நடிகர் கிருஷ்ணாவுக்கு சென்னை நுங்கம்பாக்கம் காவல் துறையினர் சம்மன் அனுப்பினர். இந்நிலையில் நேற்று வழக்கறிஞர்களுடன், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கிருஷ்ணா ஆஜரானார். அவரிடம் போதைப் பொருளை பயன்படுத்தியது குறித்தும், போதைப் பொருள் விற்பனை செய்தாரா? அல்லது போதைப்பொருள் விற்பனை செய்தவரிடம் அவர் தொடர்பில் இருந்தாரா? என்ற மூன்று கோணத்தில் கிட்டதட்ட 16 மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், போதைப்பொருள் விற்பனை செய்பவரிடம் பழப்புழக்கம் இவருக்கு இருந்ததாக என்கிற அடிப்பையில் விசாரணை நடந்து வருகிறது. நேற்றைய தினம் அவரிடம் மருத்துவ பரிசோதனை செய்தநிலையில், அதன் முடிவுகளை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கிருஷ்ணா
முருகன் மாநாடு பாஜகவுக்கு பலன் தரவே தராது.. அடித்துச் சொல்லும் SP லட்சுமணன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com