ட்ரோன் மூலம் பூச்சிமருந்து தெளிப்பு - விவசாயிகள் வரவேற்பு
மல்லிகைச் செடிகளுக்கு ஆளில்லா குட்டி விமானம் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் புதிய முறை, ஈரோடு மாவட்ட விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லி சாகுபடி செய்யப்படுகிறது. செடிகளுக்கு பூச்சி மருந்து தெளிக்க செலவு அதிகரிப்பதோடு, கால விரயம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால், சேலத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களின் மூலம் அங்குள்ள விளைநிலங்களுக்கு பூச்சி மருந்து தெளிக்கப்படுகிறது. 3 கிலோ மீட்டர் தூரம் வரை பறக்கும் திறன் கொண்ட இந்த ட்ரோன் மூலம், ஒரு நாளைக்கு 40 எக்கர் பரப்பளவிலான செடிகளுக்கு மருந்து தெளிக்கலாம் என தெரிவித்துள்ளனர். குறைந்த செலவில், வேலை விரைவாக முடிவதால்,இந்த முறைக்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்த ட்ரோனை மானிய விலையில் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.