சென்னை: அரசுப் பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துநர் பற்றாக்குறை... இதனால் ஏற்படும் பிரச்னை என்ன?

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பற்றாக்குறை காரணமாக பேருந்து சேவைகளின் எண்ணிக்கை குறைந்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை மாநகரப் பேருந்துகள்
சென்னை மாநகரப் பேருந்துகள்ட்விட்டர்

பரபரப்பாக இயங்கும் தலைநகர் சென்னையில் தற்போது பேருந்துகள் பற்றாக்குறை என்பது மக்களுக்கு பெரும் சிக்கலாக உள்ளது. சென்னையில் மாநகர போக்குவரத்து கழகத்தால் 3,365 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை மட்டுமில்லாமல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பயணிகள் என ஒருநாளைக்கு 32 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.

700க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் பேருந்துகள் இயங்கி வருகின்றன. ஆனால் பல வழித்தடங்களில் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதாக பயணிகள் கூறுகின்றனர். இதில் அண்ணாசாலையில் இருந்து குன்றத்தூர், திருவொற்றியூரில் இருந்து மிண்ட், மணலி மற்றும் தாம்பரத்தில் இருந்து மேடவாக்கம், வடபழனியில் இருந்து ஐயப்பன்தாங்கல் வழித்தடத்தில் சேவை குறைவாக இருப்பதாக கூறுகின்றனர்.

இதையும் படிக்க: சரவெடியாய் வெடித்த வேகப்பந்து வீச்சாளர்கள்.. முதல் அணியாக கெத்தாக அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா!

சென்னையில் மாநகர பேருந்துகளை இயக்குவதில் 20,896 ஒட்டுநர், நடத்துநர் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் பணியில் இருக்கின்றனர். ஆனால் கடந்த ஓராண்டுக்கும் மேல் ஓய்வு பெற்றவர்களுக்கு பதிலாக, புதிய பணி நியமனம் நடைபெறாமல் இருப்பதாக கூறுகின்றனர். இதனால் விடுப்பு எடுக்காமல் பணி செய்யும் நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் தொழிற்சங்கத்தினர் கூறுகின்றனர்.

பேருந்து பயணிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் குற்றச்சாட்டுகள் தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, எந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்து அவசியம் என்பதை கண்காணிப்பதாக கூறுகின்றனர். மேலும் வாரிசு அடிப்படையில் பணி நியமனம் நடப்பதாகவும், 400 புதிய நியமனங்கள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: ’என்னைக் கேட்காமல் ஏன் டிரீம் செய்தாய்?’ - புருவத்தை அலங்காரம் செய்த பெண்ணிற்கு தலாக் கூறிய கணவர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com