ஆர்.டி.ஓ அலுவலகத்தால் வருவாயை இழந்து தவிக்கும் ஓட்டுநர்

ஆர்.டி.ஓ அலுவலகத்தால் வருவாயை இழந்து தவிக்கும் ஓட்டுநர்

ஆர்.டி.ஓ அலுவலகத்தால் வருவாயை இழந்து தவிக்கும் ஓட்டுநர்
Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகளின் அலட்சிய செயல்பாட்டால் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது அன்றாட வருவாயை இழந்து தவித்து வருகி‌றார்.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள இடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் குமார். இவர் தனது ஆட்டோவிற்கு எஃப்.சி. எடுப்பதற்காக மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை நாடியுள்ளார். அப்போது குமா‌ரின் ஆவணங்களை சரிபார்த்த அதிகாரிகள், கடந்த‌ 3 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆட்டோவுக்கான பெர்மிட் புத்தகத்தில், வட்டாரப் போக்குவரத்துதுறை அதிகாரியின் கையெழுத்து போலியாக உள்ளது எனக்கூறி ஆட்டோவை இயக்க அனுமதி மறுத்துள்ளனர். இதனால் கடந்த ஒன்றரை மாதமாக வருவாயை இழந்து தவித்து வருவதாக கூறுகிறார் ஆட்டோ ஓட்டுநர் குமார்.

தற்போது போலி கையெழுத்து எனக் கூறுபவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக எப்படி தனது ஆட்டோவிற்கு எஃப்‌.சி. வழங்கினார்கள் என வினவியுள்ளார். மேலும், கடந்த மூன்றாண்டுகளாக எஃப்.சி. எடுப்பதற்கு இடைத்தரகர்களை அணுகியதால் உடனடியாக அனுமதி வழங்கப்பட்டதாகவும், இம்முறை நேரடியாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை குமார் நாடியதால்தான் அதிகாரிகள் அலைக்கழிப்பதாகவும் சக ஆட்டோ ஒட்டுநர்கள் கூறுகின்றனர்.

ஆட்டோ ஓட்டுநர் குமாரின் புகார் குறித்து புதிய தலைமுறையிடம் விளக்கம் அளித்த மார்த்தாண்‌டம் ஆர்.டி.ஓ, இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com