Driver
Driver Pt Desk

இந்தத் தொழிலை உயிருக்கு உயிராக நேசித்தேன்: அரசுப் பேருந்தை ஆரத்தழுவி விடைபெற்ற ஓட்டுநர்-வைரல் வீடியோ

ஓய்வு பெறும் கடைசி நாளன்று, தான் ஓட்டிய அரசுப் பேருந்தை கட்டித்தழுவி அழுத ஓட்டுநரின் வீடியோ வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (60). இவர், திருப்பரங்குன்றம் அரசுப் போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று அனுப்பானடியில் இருந்து மகாலட்சுமி காலனி செல்லும் பேருந்தை கடைசியாக ஓட்டி பணியை நிறைவு செய்தார்.

Govt Bus
Govt BusPt Desk

நேற்று மாலை பணியை முடித்த பின்பு பேருந்தின் ஸ்டேரிங்கை முத்தமிட்டு, தொட்டு வணங்கி படிக்கட்டு வழியாக இறங்கிய அவர், அதன்பின் படிக்கட்டு மற்றும் பேருந்தின் முன்பகுதியையும் தொட்டு வணங்கி கட்டித்தழுவி கண்ணீர் விட்டு அழுதார்.

இதையடுத்து தனது 30 ஆண்டு கால சேவையில் மிகவும் நேசித்தது டிரைவர் தொழில்தான் என்றும் தனது தாய் தந்தையருக்கு பின் இந்தத் தொழிலை உயிராக நேசித்தேன். இந்த தொழில் முலம்தான் எனக்கு மனைவி குழந்தைகள் கிடைத்தது. பணியில் இருந்து ஓய்வு பெறுவதால் வருத்தத்துடன் செல்கிறேன் என நெகிழ்ச்சிப் பொங்க முத்துப்பாண்டி கூறினார்.

தனது பணிக் காலத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் நல்ல முறையில் பழகியவர் என முத்துப் பாண்டியை சக ஊழியர்கள் பாராட்டினர். இதையடுத்து ஒட்டுனர் முத்துப் பாண்டியின் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com