ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது குடிநீர் ரயில் 

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது குடிநீர் ரயில் 
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது குடிநீர் ரயில் 

ஜோலார்பேட்டையில் இருந்து 25 லட்சம் லிட்டர் குடிநீருடன் ரயில் சென்னைக்கு புறப்பட்டுள்ளது. 

ஜோலார் பேட்டையில் இருந்து நாள்தோறும் ஒரு கோடி லிட்டர் குடிநீரை சென்னை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மேட்டுசக்கரகுப்பத்தில் இருந்து பார்சம்பேட்டை வழியாக ஜோலார்பேட்டைக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. அதன்படி தற்போது முதல்கட்டமாக ஜோலார்பேட்டையில் இருந்து 25 லட்சம் லிட்டர் குடிநீருடன் சென்னைக்கு ரயில் புறப்பட்டுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் கொடியசைத்து ரயிலை அனுப்பி வைத்தார். 

வாழைத் தோரணங்கள், மலர் அலங்காரங்களுடன் பூஜைக்கு பிறகு குடிநீர் ரயில் புறப்பட்டுள்ளது. 5 மணி நேரத்திலிருந்து 6 மணி நேரத்திற்குள் இந்த ரயில் சென்னை வில்லிவாக்கம் வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ரயிலின் 50 வேகன்களிலும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட தண்ணீர் நிரப்பப்பட்டு கொண்டு வரப்படுகிறது. ஜோலார்பேட்டையில் இருந்து வரும் ரயில் பெங்களூர் - சென்னை வழித்தடம் வழியாக வில்லிவாக்கத்துக்கு வரும். 

வில்லிவாக்கத்தில் இருந்து கீழ்பாக்கம் நீரேற்று நிலையத்திற்கு குடிநீர் கொண்டு செல்லப்படும். நீரேற்று நிலையத்தில் சுத்தகரிக்கப்பட்டு சென்னை மக்களின் பயன்பாட்டுக்காக குடிநீர் விநியோகிக்கப்படும்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com