\
வடிவேலு காமெடியை மிஞ்சும் ‘போதை’ ஆசாமி காமெடி

வடிவேலு காமெடியை மிஞ்சும் ‘போதை’ ஆசாமி காமெடி

வடிவேலு காமெடியை மிஞ்சும் ‘போதை’ ஆசாமி காமெடி
Published on

பாஞ்சலாங்குறிச்சி திரைப்படத்தில் பாயில் படுக்க வடிவேலு செய்யும் காமெடியை மிஞ்சும் அளவுக்கு ‌ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

போதையுடன் தள்ளாடி வரும் அந்த ஆசாமியை அவரது நண்பர் பைக்கில் அழைத்துச் செல்ல தயாராக இருந்தார். ஆனால் தலைக்கேறிய போதையால் அந்த நபரால் பைக்கில் ஏறி அமர முடியவில்லை. பைக்கில் சுற்றி அங்கும் இங்குமாய் போய் கீழே விழுந்த அந்த போதை ஆசாமி, இறுதியில் ஒரு வழியாக பைக்கில் ஏறி அமர்ந்தார்.

ஆனால் போதையில் அவர் பைக்கில் இருந்து சாய, ஏற்கனவே பைக்கில் அமர்ந்திருந்த அவரது நண்பரும் சேர்ந்து பைக்கோடு விழுந்துவிட்டார். இந்த வீடியோ பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், நாட்டில் பல பேர் மது போதையால் எந்த அளவுக்கு துயர நிலையில் இருக்கின்றனர் என்பதை வெளிப்படுத்துகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com