திராவிட மாடல் தமிழ் வார்த்தை இல்லை: நல்ல தமிழ் பெயரை கண்டுபிடியுங்கள் - ஆளுநர் தமிழிசை

திராவிட மாடல் தமிழ் வார்த்தை இல்லை: நல்ல தமிழ் பெயரை கண்டுபிடியுங்கள் - ஆளுநர் தமிழிசை
திராவிட மாடல் தமிழ் வார்த்தை இல்லை: நல்ல தமிழ் பெயரை கண்டுபிடியுங்கள் - ஆளுநர் தமிழிசை

திராவிட மாடல் என்ற பெயர் தமிழ் இல்லை. எனவே முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மகனான தமிழக முதல்வர் ஸ்டாலின், திராவிடர் மாடல் என்ற வார்த்தைக்கு பதிலாக ஒரு நல்ல தமிழ் பெயரை கண்டுபிடிக்க வேண்டும் என்பது தனது கருத்து என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நெல்லையில் பேட்டியளித்தார்.

தூத்துக்குடியில் நடைபெறும் மகாகவி பாரதியாரின் 141-வது பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்திருந்தார். அங்கு செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய அவர்...

”புதுச்சேரியில் புயல் வருகிறது என தெரிவித்த உடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதன் மூலம் பெரிய அளவிலான இழப்புகள் ஏற்படவில்லை. பல இடங்களில் வாகனங்கள் பாதிக்கப்பட்டன. இருந்தபோதிலும் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பாக கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது.

ஜி-20 மாநாட்டிற்கு இந்திய தலைமை தாங்குவது பெருமை கொள்ள வேண்டியது. ஜி-20 மாநாட்டை இந்திய நடத்துவது நாம் எல்லோரும் கொண்டாடப்பட வேண்டியது. ஜி-20 மாநாட்டில் பொருளாதாரம், இயற்கை பாதுகாப்பு, உள்ளிட்டவை தான் மிக முக்கிய நோக்கம்.

புதுவையில் பிளாஸ்டிக் ஒழிக்கப்பட்டுள்ளது. உலகிற்கு பல நல்ல செய்திகள் ஜி-20 மாநாடு மூலமாக எடுத்து செல்லப்பட உள்ளது. இந்தியா முழுவதும் 200 இடங்களில் மாநாடுகள் நடத்தப்பட உள்ளது. ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்து புதுவையில் ஆக்கப்பூர்வமாக தான் செயல்படுகிறோம். அரசுக்கு துணையாக, துணை நிலை ஆளுநராக செயல்பட்டு வருகிறேன்.

அரசுடன் பிணக்கு இல்லை. இணக்கமாக தான் செயல்பட்டு வருகிறோம். குறிப்பாக கோவிட் காலத்தில் மூன்று மாதங்கள் ஆளுநர் ஆட்சி தான் இருந்தது. அப்போது ரெம்டெசிவிர் மருந்து மற்றும் தடுப்பூசிகள் தட்டுப்பாடு இல்லாமல் மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்.

புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோவிலில் இருந்த லட்சுமி யானைக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சிக்குரியது. மீண்டும் கோவிலுக்கு யானை கொண்டுவர முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.

திராவிட மாடல் என்ற பெயர் தமிழ் இல்லை. எனவே முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மகனான தமிழக முதல்வர் ஸ்டாலின், திராவிடர் மாடல் என்ற வார்த்தைக்கு பதிலாக ஒரு நல்ல தமிழ் பெயரை கண்டுபிடிக்க வேண்டும் என்பது எனது கருத்து” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com