திராவிட மொழிகள் 4500 ஆண்டுகள் பழமையானது ! தமிழ் அதைவிட தொன்மையானது

திராவிட மொழிகள் 4500 ஆண்டுகள் பழமையானது ! தமிழ் அதைவிட தொன்மையானது

திராவிட மொழிகள் 4500 ஆண்டுகள் பழமையானது ! தமிழ் அதைவிட தொன்மையானது
Published on

தென் இந்தியாவில் இருக்கும் திராவிட மொழிகள் 4500 ஆண்டுகள் பழமையானது என்றும் அதைவிட தொன்மையானது தமிழ் மொழி என்றும் ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஜெர்மனியின் மேக்ஸ் பிளான்க் கல்வி நிறுவனமும், டேராடூன் இந்திய வன உயிர் கல்வி நிறுவனமும் இணைந்து மொழி ஆராய்ச்சி நடத்தி அதன் முடிவுகளை இப்போது வெளியிட்டுள்ளனர். தென் இந்தியாவின் 82 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிக்குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது என்றும் அதில் மிகப் பழமையான மொழி தமிழ் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வின் முடிவில் தெற்காசியப் பகுதி 600 மொழிகளின் தாயகமாக இருந்துள்ளது.  திராவிடம், ராவிடம், இந்தோ-ஐரோப்பா, சீனா-திபெத்தியம் உள்பட 6 மொழிக் குடும்பங்களின் கீழ் அந்த மொழிகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த 6 மொழிகளில் முதன்மையானதும், பழமையானதும் திராவிட மொழிக்குடும்பமே என்று ஆணித்தனமாக ஆய்வில் வலியுறுத்தியுள்ளது. 

இப்போதைய சூழ்நிலையில் ஏறக்குறைய 22 கோடி மக்கள் திராவிட மொழிகளை தற்போது பேசுகின்றனர். மேலும் உலகின் மூத்த மொழிகளில் தமிழைப் போலவே சம்ஸ்கிருதமும் கருதப்படுகிறது. ஆனால், தமிழைப் பொருத்தவரை சமஸ்கிருதம் போல் சிதைந்து போகாமல் கல்வெட்டுக்களும், காப்பியங்களும் தற்காலம் வரை காணக்கிடைக்கின்றதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com