தமிழக முதலமைச்சராக வி.கே.சசிகலா பொறுப்பேற்க உள்ளதால், இரட்டை அதிகார நிலைப்பாட்டினால் முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்பில்லை என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுங்கட்சியின் கட்டுக்கோப்பும் கட்டுப்பாடும் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறினார். பெரிதும் ஆணாதிக்கம் கோலோச்சும் உலகில் மீண்டும் ஒரு பெண், கட்சித் தலைமை, ஆட்சித் தலைமை இரண்டையும் பெறுவது நல்ல திருப்பம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், இரட்டை அதிகார நிலைப்பாட்டினால் கட்சி மற்றும் ஆட்சியில் அதிகார முரண்கள் ஏற்பட வாய்ப்பில்லை என கி.வீரமணி கூறியுள்ளார்.

