\
குழந்தை மற்றும் தாய் லாவண்யா
குழந்தை மற்றும் தாய் லாவண்யா PT Tesk

”வலிப்பு வந்து இறந்துட்டான்” - இரண்டு வயது மகனின் மரணத்தில் 2வது கணவருடன் சேர்ந்து நாடகமாடிய தாய்!

குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்து இறந்துவிட்டதாக தாய் லாவண்யா தெரிவித்த நிலையில், பிரேத பரிசோதனையில் குழந்தையின் தலையில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
Published on

சென்னை மாங்காடு அருகே கொருகம்பாக்கத்தை சேர்ந்தவர் லாவண்யா. இவர் கடந்த 6ம் தேதி தன்னுடைய 2 வயது ஆண் குழந்தை சர்வேஸ்வரன் வலிப்பு வந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டதால் உயிரிழந்துவிட்டதாக கூறினார்.

இதற்கிடையில் தனது குழந்தை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக லாவண்யாவின் முதல் கணவர் செல்வ பிரகாசம் மாங்காடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். விசாரணையில் ”செல்வ பிரகாசம் - லாவண்யா தம்பதிக்கு ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு சர்வேஸ்வரன் என்ற குழந்தை இருந்தது. லாவண்யாவிற்கு, தான் குடியிருந்த வீட்டில் கீழ் தளத்தில் இருந்த மணிகண்டன் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதை அறிந்து செல்வ பிரகாசம் பிரிந்து சென்றார். இதனையடுத்து, மணிகண்டனை திருமணம் செய்து லாவண்யா தனது குழந்தையுடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

மாங்காடு காவல் நிலையம்
மாங்காடு காவல் நிலையம்

கடந்த 6ம் தேதி வலிப்பு ஏற்பட்டு குழந்தை கீழே விழுந்து இறந்துவிட்டதாக தெரிவித்த நிலையில், பிரேத பரிசோதனையில் குழந்தைக்கு தலையில் பல்வேறு பகுதியில் காயம் இருப்பதாக தெரிய வந்தது.

இதையடுத்து வழக்கு கொலை வழக்காக மாற்றி லாவண்யா மற்றும் அவரது இரண்டாவது கணவர் மணிகண்டனை மாங்காடு போலீசார் கைது செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com