செம்மொழி ஆய்வு மையத்தை மாற்றக் கூடாது: டி.ராஜா வலியுறுத்தல்

செம்மொழி ஆய்வு மையத்தை மாற்றக் கூடாது: டி.ராஜா வலியுறுத்தல்

செம்மொழி ஆய்வு மையத்தை மாற்றக் கூடாது: டி.ராஜா வலியுறுத்தல்
Published on

சென்னையில் தன்னாட்சி அந்தஸ்துடன் இயங்கி வரும் செம்மொழி ஆய்வு மையத்தைத் திருவாரூருக்கு மாற்றக் கூடாது என மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

மாநிலங்களவையில் பேசிய அவர், "சென்னையில் தன்னாட்சி அந்தஸ்துடன் இயங்கி வரும் செம்மொழி ஆய்வு மையத்தை திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துக்கு மாற்ற முயற்சிகள் நடந்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒருவேளை மத்திய அரசு இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டால், அதை தமிழறிஞர்களும், தமிழர்களும் நிச்சயம் ஏற்றுக் கொ‌ள்ள மாட்டார்கள். இதுதொடர்பாக மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்" என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ‌ஜவடேகர் "திருவாரூர் பல்கலைக்கழகத்துக்கு செம்மொழி ஆய்வு மையத்தை மாற்றுவது குறித்து ‌மத்திய அரசு எந்த மு‌டிவையும் எடுக்கவில்லை" என்றார். அனைத்து இந்திய மொழிகளு‌க்கும் மத்திய அரசு உரிய மரியாதை அளித்து வருகிறது என்றும் ஜவடேகர் தெரிவி்த்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com