\
கடலூரில் கழிவுநீரால் குடிநீரைப் பயன்படுத்த முடியாத மக்கள்

கடலூரில் கழிவுநீரால் குடிநீரைப் பயன்படுத்த முடியாத மக்கள்

கடலூரில் கழிவுநீரால் குடிநீரைப் பயன்படுத்த முடியாத மக்கள்
Published on

கடலூரில் கழிவுநீர் குடிநீரில் கலப்பதால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சித்தூரில் அதிகாரிகளின் அலட்சியத்தால் குடிநீர் வீணாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. ஆழ்த்துளை கிணறு மற்றும் குடிநீர் தொட்டிக்கு அருகில் சாலையில் கழிவுநீர் குளம் போல் தேங்கியுள்ளது. அதனால், அந்த குடிநீரை பயன்படுத்த முடியாமல் 2 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்துவதாக மக்கள் ஆதங்கப்படுகின்றனர். இது குறித்து பலமுறை நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com