சென்னையில் திருமணமான 2 மாதங்களில் பெண் மருத்துவர் தற்கொலை
சென்னைக்கு அருகேயுள்ள மடிப்பாக்கம் ராம்நகரில் திருமணமான இரண்டே மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கூடுதல் வரதட்சணை கேட்டு தங்கள் மகளை மருமகன் வீட்டார் கொடுமைப்படுத்தியதே இந்த தற்கொலைக்கு காரணம் என பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த மருத்துவர் விஷ்ணுபரத் ரெட்டிக்கும், பல் மருத்துவர் பேபி ஷாலினி என்பவருக்கும் கடந்த நவம்பர் 29-ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. 80 சவரன் நகை, 10லட்சம் ரூபாய் பணம் வரதட்சணையாக கொடுத்து இந்த திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவுக்கு சென்னையில் பணி கிடைத்ததால், மடிப்பாக்கத்தில் தங்கியுள்ளனர்.
ஆனால், கூடுதலாக 5 லட்சம் வரதட்சணை கேட்டு தங்கள் மகளை வீட்டு சிறையில் வைத்து கணவன் வீட்டார் கொடுமைப்படுத்தியதாக பெண்ணின் பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.