வரதட்சணை கொடுமை : தண்டனையை 10 ஆண்டாக உயர்த்த முதலமைச்சர் பரிந்துரை

வரதட்சணை கொடுமை : தண்டனையை 10 ஆண்டாக உயர்த்த முதலமைச்சர் பரிந்துரை

வரதட்சணை கொடுமை : தண்டனையை 10 ஆண்டாக உயர்த்த முதலமைச்சர் பரிந்துரை
Published on

வரதட்சணை கொடுமைக்கான தண்டனையை 7 ஆண்டிலிருந்து 10 ஆண்டாக உயர்த்த வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி விதி 110-ன் கீழ் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் சமூகநலத்துறையில் அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், “நிர்பயா திட்டத்தின் மூலம் ஏற்கனவே பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 18 வயதுக்குட்பட்டவர்களை பாலியல் தொழிலுக்கு விலைக்கு வாங்குவோருக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும். பெண்களை தொடர்ந்து பின் தொடர்ந்து தொந்தரவு கொடுத்தால் தண்டனை.

5 ஆண்டில் இருந்து 7 ஆண்டாக உயர்த்த வேண்டும், பெண்கள் மற்றும் குழுந்தைகளுக்கான பாதுகாப்பினை உறுதி செய்ய வரதட்சணை கொடுமைகளுக்கு 7 ஆண்டிலிருந்து 10 ஆண்டு தண்டனை வழங்க திருத்தம் செய்ய வேண்டும்” என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்.

மேலும் உயர்கல்வித்துறையிலும் அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், “திருவள்ளுவர் பல்கலைகழகத்தை இரண்டாக பிரித்து விழுப்புரத்தில் புதிய பல்கலைகழகம் தொடங்கப்படும். இந்த ஆண்டே அது செயல்பட தொடங்கும்” எனக் குறிப்பிட்டார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com