தாய், தங்கையை கொன்றது ஏன்? என்ஜினீயர் வாக்குமூலம்

தாய், தங்கையை கொன்றது ஏன்? என்ஜினீயர் வாக்குமூலம்

தாய், தங்கையை கொன்றது ஏன்? என்ஜினீயர் வாக்குமூலம்
Published on

தனது தாய் மற்றும் தங்கையை கொன்றது ஏன் என்பது பற்றி போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.சென்னை சைதாப்பேட்டை கே.பி.கோவில் தெருவில் உள்ள மகாலட்சுமி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் வசித்து வந்தவர் ஹேமலதா. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைபார்த்தார். இவரது கணவர் சண்முகம் ஒரு வருடத்துக்கு முன்பு இறந்துவிட்டார். வீட்டில் ஹேமலதா தனது மகன் பாலமுருகன், மகள் ஜெயலட்சுமி ஆகியோருடன் வசித்துவந்தார். பாலமுருகன் எம்.இ. படித்துவிட்டு, தரமணியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். ஹேமலதாவும், ஜெயலட்சுமியும் தனது வீட்டில் கொடூரமான முறையில், நேற்று முன்தினம் கொல்லப்பட்டு கிடந்தனர். இதுபற்றி சைதாப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஹேமலதா, ஜெயலட்சுமி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, பாலமுருகன் தனது தாய் மற்றும் தங்கையுடன் நீண்ட நேரம் சண்டைபோட்டுவிட்டு வெளியில் சென்றதாகவும் பின்னர் வீட்டுக்கு வந்தவர் மாலை 6 மணியளவில் வெளியில் சென்றதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

செல்போன் மூலம் அவர் இருக்கும் இடத்தை தேடினர். கேளம்பாக்கத்தில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அவர் தங்கியிருப்பது தெரிய வந்தது. அங்கு சென்று அவரைப் பிடித்தனர். அப்போது கொலைகள் செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். போலீசில் அவர் கூறியிருப்பதாவது: எனது தந்தை மீது நான் அளவு கடந்த பாசம் வைத்திருந்தேன். அவர் இறந்த சோகத்தை தாங்கமுடியவில்லை. நாமும் இறந்துவிடலாம் என நினைத்தேன். கோவளம் சென்று இரண்டு முறை கடலில் குதித்து தற்கொலை செய்ய முயன்றேன். காப்பாற்றிவிட்டார்கள். பிறகு தாய் மற்றும் தங்கையோடு சேர்ந்து தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்தேன். எனது முடிவை அவர்கள் ஏற்காததால், அவர்களை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன். அதன்படி, என் அம்மாவை சமையல் அறையில் கிடந்த கத்தியால் குத்தி கொலை செய்தேன். எனது தங்கையை வாயைப்பொத்தி கத்தியால் குத்திக்கொன்றுவிட்டு தப்பிவிட்டேன். இவ்வாறு பாலமுருகன் கூறியுள்ளார்.

பாலமுருகன் தனது தந்தையின் இழப்பால் ஏற்பட்ட சோகத்தில் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com