தீபாவளி
தீபாவளிpt web

நெருங்கும் தீபாவளி... பட்டாசு வெடிக்கும் போது செய்ய வேண்டியதும், கூடாததும் என்ன?

தீபாவளி பண்டிகையை ஒட்டி பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
Published on

உச்சநீதிமன்ற உத்தரவின்படி,

- அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் வெடிக்கப்பட வேண்டும்.

- காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை என இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்க வேண்டும்.

தீபாவளி
''சீன பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்'': காவல்துறை

- சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியின் படி பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ கூடாது.

- தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு பட்டாசுகளை விற்பதோ, பயன்படுத்தவோ கூடாது.

- பட்டாசுகளை எளிதில் தீப்பிடிக்கு பொருட்களுக்கு அருகே வெடிக்க கூடாது.

- வாகனங்களுக்கு அருகேயும் பட்டாசுகளை வெடிக்க கூடாது.

- மேலும் பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடக்கூடாது எனவும் மக்கள் நடமாடும் இடத்தில் கவனக்குறைவாக பட்டாசுகளை வெடிக்க கூடாது

- குடிசை பகுதி, மாடிக்கட்டிடங்கள் அருகே ராக்கெட் போன்ற பட்டாசுகளை வெடிக்ககூடாது

- ஈரமுள்ள பட்டாசுகளை சமையலறையில் வைத்து உலர்த்தக்கூடாது

- பெரியவர்களின் பாதுகாப்பின்றி சிறியவர்கள் பட்டாசு வெடிக்க செல்ல அனுமதிக்கூடாது

- பட்டாசு விற்கும் கடை அருகே புகைப்பிடிக்கவோ, தீ பற்றவைக்கவோ கூடாது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com