\
வேளச்சேரியில் திடீரென வெடித்துச் சிதறிய வீட்டின் கதவுகள்..!

வேளச்சேரியில் திடீரென வெடித்துச் சிதறிய வீட்டின் கதவுகள்..!

வேளச்சேரியில் திடீரென வெடித்துச் சிதறிய வீட்டின் கதவுகள்..!
Published on

சென்னை வேளச்சேரியில் திடீரென வீட்டிலுள்ள 3 கதவுகள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாரிமுத்து என்பவர் வீட்டின் சமையலறை, படுக்கையறை மற்றும் முன்பக்க கதவு என மூன்றும் தீப்பிடிக்காமலேயே திடீரென வெடித்துச் சிதறின. இதனால் வீட்டிலிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற தீயணைப்புத்துறையினர், இதுகுறித்து தடயவியல் வல்லுநர்களுக்கு தெரிவித்தனர்.

அவர்கள் வீட்டை ஆய்வு செய்தபின் அங்கும் யாரும் தங்க வேண்டாம் என அறிவுறுத்தினர். வீட்டில் அரை மணி நேரத்துக்கும் மேலாக தண்ணீரை சுட வைத்ததாக தெரிகிறது. இதன்காரணமாக கொதிநிலை அதிகமாகி அழுத்தம் ஏற்பட்டு கதவுகள் வெடித்திருக்க வாய்ப்புள்ளதாக தடயவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சமையலறையில் உள்ள எரிவாயு சிலிண்டர் மற்றும் அதன் பைப்பை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com