தமிழ்நாடு
அதிமுக உடையக் கூடாது... எம்ஜிஆர் உறவினர் சுதா பேட்டி
அதிமுக உடையக் கூடாது... எம்ஜிஆர் உறவினர் சுதா பேட்டி
எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக கட்சி உடையக் கூடாது எனவும், சசிகலாவை முதலமைச்சராக்க அதிமுக முடிவு செய்தால் அதற்கு தனது ஆதரவு உண்டு எனவும் எம்ஜிஆரின் உறவினர் சுதா தெரிவித்துள்ளார்.
சென்னை ராமாவரம் தோட்டத்தில் எம்ஜிஆரின் உறவினரான சுதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ராமாவரம் தோட்டத்தை சசிகலா கைப்பற்ற முயற்சி செய்வதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு என தெரிவித்தார். சசிகலா தலைமையை ஏற்பதில் எந்தவித பிரச்னையும் இல்லை என தெரிவித்த அவர், சசிகலாவை முதலமைச்சராக்க அதிமுக முடிவு செய்தால் அதற்கு தனது ஆதரவு உண்டு எனவும் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை என குறிப்பிட்ட அவர், அது தொடர்பாக வீண் சர்ச்சைகளை பரப்புகிறார்கள் எனவும் தெரிவித்தார். எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.