நடவடிக்கை எடுத்தால் கவலை இல்லை: எதிர்த்து ஓட்டுப் போட்ட ஓபிஎஸ் அணி எம்எல்ஏ

நடவடிக்கை எடுத்தால் கவலை இல்லை: எதிர்த்து ஓட்டுப் போட்ட ஓபிஎஸ் அணி எம்எல்ஏ
நடவடிக்கை எடுத்தால் கவலை இல்லை: எதிர்த்து ஓட்டுப் போட்ட ஓபிஎஸ் அணி எம்எல்ஏ

கொறடா உத்தவை மீறி வாக்களித்ததால் சபாநாயகர் நடவடிக்கை எடுத்தாலும் அதைப் பற்றிக் கவலையில்லை என ஓ.பன்னீர்செல்வம் அணி எம்எல்ஏ ஓ.கே.சின்னராஜ் கூறியுள்ளார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ் தனது தொகுதிக்குட்பட்ட தேக்கம்பட்டி பகுதியில் தமிழக அரசு சார்பில் நடைபெற்று வரும் கோவில் யானைகளுக்கான புத்துணர்வு நலவாழ்வு முகாமை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தற்போது பதவியேற்றுள்ள அரசு ஒரு கானல் நீர் போன்றது என்றார்.

சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போது தி.மு.க உறுப்பினர்கள் நடந்துக்கொண்ட விதம் அவர்களது சொந்த ஆதாயத்திற்காக என்று அவர் கருத்துத் தெரிவித்தார். ஓ.பி.எஸ் தலைமையில் நாங்கள் மறைமுக வாக்கெடுப்பு கேட்டது அ.தி.மு.கவும் அதன் அரசும் ஒரு குடும்பத்தின் கட்டுபாட்டிற்குள் சென்று விடக்கூடாது என்ற எண்ணத்தில்தான் என்றும் அவர் கூறினார்.

அதிமுக சட்டமன்ற கொறடாவின் உத்தரவை மீறி நான் மாற்றி வாக்களித்துள்ளேன். அதற்காக சபாநாயகர் என் மீது நடவடிக்கை எடுப்பதை பற்றி கவலையில்லை, நான் என் மனசாட்சிப்படி மக்கள் கருத்திற்கேற்ப நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளேன். உண்மை வென்றே தீரும் என்ற நம்பிக்கை உள்ளது என ஓ.கே.சின்னராஜ் தெரிவித்தார்.

எம்எல்ஏ ஓ.கே.சின்னராஜுடன் மேட்டுப்பாளையம் அதிமுகவின் நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் யாரும் வரவில்லை. அக்கட்சியின் தொண்டர்கள் சிலர் மட்டுமே அவருடன் வந்திருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com