பெண்களின் பிரச்னையைத் தீர்க்க கைகோர்த்த அமெரிக்கா-கனடா
பணிக்குச் செல்லும் பெண்களின் பிரச்னைகளைத் தீர்க்க அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து குழு ஒன்றினை அமைத்துள்ளன.
இதுதொடர்பான முடிவினை கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடியூ மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். இந்த குழுவில் இருநாடுகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெறுவார்கள் என்றும், பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்யவே இந்த குழு அமைக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். பெண்களின் வேலைவாய்ப்புக்களை அதிகரிப்பதுடன், பணியிடங்களில் அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்று கனடா அதிபர் ட்ரூடியூ பேசினார். அமெரிக்க அதிபராகக் கடந்த ஜனவரி 20-ல் பதவியேற்ற ட்ரம்ப், தொடர்ச்சியாக பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடியூவை வாஷிங்டனில் சந்தித்துப் பேசினார். இரு நாடுகள் உறவு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ட்ரம்ப் மற்றும் ட்ரூடே ஆகியோர் விவாதித்தனர்.