\
பொள்ளாச்சி சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை - ஸ்டாலின்

பொள்ளாச்சி சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை - ஸ்டாலின்

பொள்ளாச்சி சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை - ஸ்டாலின்
Published on

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகசுந்தரத்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். முன்னதாக தொண்டாமுத்தூரில் பரப்புரையின்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தபின் அமைச்சர் வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அமைச்சர் வேலுமணி காப்பாற்றுவதாக அவர் குறிப்பிட்டார். 

உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றால் திமுக வெற்றி பெற்றுவிடும் என்பதற்காகவே, தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் விமர்சித்தார். குனியமுத்தூரில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் அருகே, பரப்புரையில் ஈடுபட்ட ஸ்டாலின், ஏழு வருடமாக பாலியல் வன்கொடுமை நடந்திருக்கும் சூழலில் போலீசார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினார். மேலும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை எனக் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com