"உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து விவாதம் வேண்டாம்"- காதர் மொய்தீன்

"உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து விவாதம் வேண்டாம்"- காதர் மொய்தீன்
"உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து விவாதம் வேண்டாம்"- காதர் மொய்தீன்

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை விவாதிக்க வேண்டாம் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.

70 ஆண்டுகளாக நீடித்து வந்த அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேபோல், அயோத்தியிலேயே மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியத்திற்கு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் "அயோத்தி வழக்கில் 2.77 நிலம் யாருக்கு சொந்தமானது என்பது தான் முக்கிய அம்சம். 5 நீதிபதிகளும் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கியது இது தான் முதல் முறை. 

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்க வேண்டும். தீர்ப்பில் சொல்லப்பட்ட விஷயங்கள் நிறைய இருக்கிறது. ஆனால் அதை தற்போது பேச முடியாது. இஸ்லாமிய மக்கள் உட்பட அனைவரும்  உச்சநீதிமன்றம் தீர்ப்பை மதிக்க வேண்டும். அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.அமைதியின் நாளாக இருக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கருதுகிறது. மேலும் மத்திய மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தீர்ப்பு குறித்து விவாதம் மேற்கொள்ள வேண்டாம்" என தெரிவித்தார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com