என்னை பார்த்து பயப்பட நான் என்ன சிங்கமா? புலியா? - ப.சிதம்பரம் கேள்வி

என்னை பார்த்து பயப்பட நான் என்ன சிங்கமா? புலியா? - ப.சிதம்பரம் கேள்வி

என்னை பார்த்து பயப்பட நான் என்ன சிங்கமா? புலியா? - ப.சிதம்பரம் கேள்வி
Published on

என்னை பார்த்து பயப்பட நான் என்ன சிங்கமா புலியா? நான் ஒரு மனிதன். காங்கிரஸ் கட்சியை பிரதிபலிக்கும் மனிதன் என காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு பின் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "அனைவரும் கூடி இந்த வேட்புமனுவை தாக்கல் செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாளையோடு வேட்புமனுத்தாக்கல் நிறைவடைகிறது. 3ம் தேதி வேட்புமனு திரும்ப பெறுவதற்கான கடைசி நாள். மூன்றாம் தேதி மாலைதான்  தேர்தல் இருக்கிறதா என்பது தெரியும், அதன்பிறகு விரிவான செய்தியாளர் சந்திப்பு மேற்கொள்கிறேன்.



புலனாய்வுத்துறை, அமலாக்கத் துறை பற்றி எல்லாம் புதிதாக கருத்து சொல்ல ஒன்றுமில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு ஷாரூக்கான் மகனுடைய வழக்கு எந்த விதத்தில் முடிந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இன்று ஜார்க்கண்ட் முதலமைச்சர் குற்றம்சாட்டி இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மக்களவை தலைவர் சவுத்ரி சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இதையெல்லாம் வைத்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். சாதாரண மக்கள் எல்லாம் முடிவு செய்துவிட்டனர். நீங்களும் ஒரு முடிவுக்கு வாருங்கள்" எனத் தெரிவித்தார்

பாஜகவுக்கு உங்களைப்பார்த்து பயமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "என்னை பார்த்து பயப்பட சிங்கமா புலியா, நான் ஒரு மனிதன். காங்கிரஸ் கட்சியை பிரதிபலிக்கும் மனிதன். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை அழுத்தமாக, உரத்த குரலில் சொல்லி வருபவன். என்னை பார்த்து பயப்படுவதாக நினைக்கவில்லை. காங்கிரஸின் கொள்கையைக் கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள்.



என்னை விட தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் காங்கிரஸ் கட்சியில் இந்தியாவில் இருக்கிறார்கள். ஆனால் தேர்வு குறித்து நான் எப்படி கருத்து சொல்ல முடியும்" என தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com