மருத்துவமனையில் குழந்தையைக் கடித்த நாய்கள் - மருத்துவர்கள் அலட்சியம்

மருத்துவமனையில் குழந்தையைக் கடித்த நாய்கள் - மருத்துவர்கள் அலட்சியம்

மருத்துவமனையில் குழந்தையைக் கடித்த நாய்கள் - மருத்துவர்கள் அலட்சியம்
Published on

நாமக்கல் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த 4 வயது குழந்தையை நாய்கள் கடித்து குதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த புனிதவள்ளி என்ற 4 வயது குழந்தை உடல்நலக்குறைவு காரணமாக, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. இன்று காலை மருத்துவமனை படுக்கையில் இருந்த குழந்தையை, திடீரென 5க்கும் அதிகமான நாய்கள் கடித்து குதறின. 

அக்கம்பக்கத்தினர், நாய்களை விரட்டி, குழந்தையை காப்பாற்றினர். இந்தச் சம்பவம் குறித்து மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தும், 2 மணி நேரத்திற்கு மேலாகியும் மருத்துவர்கள் வரவில்லை. இதனால் மருத்துவமனையில் இருந்தவர்கள் அதிருப்தியடைந்தனர். உள்நோயாளிகள் மருத்துவப் பிரிவு உள்ள வளாகத்தில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிவதால், அவற்றை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் உட்பட அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com