சுவற்றின் இடையே மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடிய நாய்: பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்

சுவற்றின் இடையே மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடிய நாய்: பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்
சுவற்றின் இடையே மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடிய நாய்: பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்

திருச்சியில் சுவற்றின் இடையில் மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடிய நாயை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டுள்ளனர்.

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை இந்திரா நகரைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது வீட்டில் நாய் ஒன்று வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் தேவேந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்கும் இடையே சுற்றுச்சுவர் மிகவும் குறுகியதாக உள்ளதால் அந்த நாய் எதிர்பாராதவிதமாக இரு சுவர்களுக்கு இடையே சிக்கிக் கொண்டது. இதனால் வெளியே வர முடியாமல் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த நாயின் சத்தம் கேட்டு வந்த தேவேந்திரனால் நாயை மீட்க முயன்றும் முடியவில்லை.

உடனே அவர் திருச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததையடுத்து, விரைந்துவந்த தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அந்த சுவற்றை உடைத்தனர். பின்னர் அரை மணிநேர போராட்டத்திற்கு பிறகு நாயை உயிருடன் மீட்டனர். துரிதமாக செயல்பட்டு வளர்ப்பு நாயை மீட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com