\
என்ன நடந்தது மதுரை தெப்பக்குளத்தில்? நீண்ட நேரமாக குரைத்த நாயால் பரபரப்பு!!

என்ன நடந்தது மதுரை தெப்பக்குளத்தில்? நீண்ட நேரமாக குரைத்த நாயால் பரபரப்பு!!

என்ன நடந்தது மதுரை தெப்பக்குளத்தில்? நீண்ட நேரமாக குரைத்த நாயால் பரபரப்பு!!
Published on

மதுரை தெப்பக்குளத்தில் நின்று நீண்ட நேரமாக குரைத்துக்கொண்டே இருந்த நாயால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்

மதுரை தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தின் ஒரு பகுதியை நோக்கி நாய் ஒன்று நீண்ட நேரமாக குரைத்துக் கொண்டே இருந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நாயின் சத்தத்தை அடுத்து தெப்பக்குள பகுதிக்குச் சென்று எதாவது இருக்கிறதா என பார்த்துள்ளனர்.

சந்தேகப்படும்படி எதுவும் இல்லாத நிலையில் இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தெப்பக்குள பகுதிக்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் ரப்பர் படகு உதவியுடன் தெப்பக்குளத்திற்குள் இறங்கி சோதனை செய்தனர். நாயின் குட்டிகள் எதாவது இறந்துவிட்டதா? அல்லது அசம்பாவித சம்பவம் எதுவும் நடந்ததா என்று பல கோணத்தில் தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சோதனை செய்தனர். பின்னர் எதுவும் கிடைக்காத நிலையில் தீயணைப்புத்துறையினர் திரும்பிச் சென்றனர்.

நாயும் குரைப்பதை விட்டுவிட்டு திரும்பிச் சென்றது. நாய் ஏன் தொடர்ந்து குரைத்தது என்பதற்கு விடை தெரியாவிட்டாலும், சிறு புகாரையும் அலட்சியம் செய்யாமல் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்ட தீயணைத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com