\
Dog Bite Cases Cross 4.68 Lakh in Tamil Nadu This Year
நாய்க்கடிமுகநூல்

தீவிரமடையும் நாய்க்கடி அவலம்.. சேலம் முதலிடம்.. பொது சுகாதாரத்துறை அதிர்ச்சித் தகவல்!!

சேலம், திருநெல்வேலி, கடலூர், சென்னை மாவட்டங்களில் அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது.
Published on

தமிழகத்தில் இந்த ஆண்டில் இதுவரை 4 லட்சத்து 68 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரேபிஸ் தொற்றால் 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் 6 லட்சத்து 25 ஆயிரத்து 700 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு 34 பேர் உயிரிழந்தனர். நடப்பாண்டில் மாவட்ட அளவில் சேலத்தில் அதிகபட்சமாக 28 ஆயிரத்து 166 பேரும், திருநெல்வேலியில் 23 ஆயிரத்து 95 பேரும், கடலூரில் 22 ஆயிரத்து 113 பேரும், சென்னையில் 9 ஆயிரத்து 229 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

dog bite
dog biteFB

கடந்த சில ஆண்டுகளின் நாய்க்கடித் தரவுகளை ஆராய்ந்ததில் நாய்க்கடியால் பாதிக்கப்படுவோரில் 60 சதவீதம் ஆண்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும் 31 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களே நாய்க்கடியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு அடுத்தபடியாக 10 வயதுக்குட்பட்ட சிறாரும் அதிகமாக நாய்க்கடிக்கு ஆளாகின்றனர். உச்ச நீதிமன்ற தலையீட்டுக்குப் பிறகும் நாய்க்கடி அவலம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. பொதுமக்களின் வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை தமிழ்நாடு அரசு முதன்மை முன்னுரிமையாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Dog Bite Cases Cross 4.68 Lakh in Tamil Nadu This Year
1 சவரன் தங்கம் ரூ.1.50 லட்சம்-ஆ? போரால் வரும் ஆபத்து? கலங்கிய நடுத்தர வர்க்கம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com