பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு தண்ணீர் கொடுக்கவில்லை: தமிழக அரசு

பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு தண்ணீர் கொடுக்கவில்லை: தமிழக அரசு

பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு தண்ணீர் கொடுக்கவில்லை: தமிழக அரசு
Published on

பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் கொடுக்கவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நெல்லை மாவட்டம் தச்சநலூரை சேர்ந்த ராகவன் என்பவர் தொடர்ந்த வழக்கில், கங்கைகொண்டானில் உள்ள சிப்காட் வளாகத்தில் செயல்படும் பெப்சி, கோக் உள்பட 25 நிறுவனங்களுக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் குறைந்த கட்டணத்தில் 48 லட்சத்து 66 ஆயிரம் லிட்டர் தண்ணீர் எடுக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார் என்றும் தற்பொழுது கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்க தடை விதிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், வேல்முருகன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த நவம்பர் மாதம் முதல் பெப்சி மற்றும் கோக் நிறுவனங்களுக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் வழங்கப்படுவதில்லை என்றும் பிற நிறுவனங்களுக்கு குடிநீர் தேவைகளுக்காக மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது என்றும் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து வரும் 27 ஆம் தேதிக்குள் தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், மனு மீதான விசாரணையை வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com